புதுக்கோட்டை-மானாமதுரை இடையே 23 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மாற்றியமைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
புதுக்கோட்டை- மானா மதுரை இடையே நெடுஞ்சாலையில் 23 கிலோ மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள 2 சுங்கச்சாவடிகளின் கட்ட ணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியைச் சேர்ந்த இளங்கோ, மதுரை ஐகோர்ட் டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் கிராமம் மிகச் சிறியது. இங்கு வசிப்பவர் களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உணவுப் பொருள் உள்ளிட்டவை களுக்கு இங்கிருந்து 6 கிலோ மீட்டர் தூரமுள்ள கீழச்செவல் பட்டிக்கோ அல்லது 10 கிலோ மீட்டர் தூரமுள்ள திருப்பத் தூருக்கோதான் செல்ல வேண்டும்.
இதற்காக தேசிய நெடுஞ்சாலையை எங்கள் கிராமத் தினர் பயன்படுத்துகின்றனர். எங்கள் கிராமத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் செண்பகம்பேட்டை என்ற பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. இதேபோல இந்த சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் லெம்பக்குடி பகுதியில் மற்றொரு சுங்கச் சாவடி உள்ளது.
அகற்ற வேண்டும்
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப் பதற்கான விதிகளின்படி 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப் பட வேண்டும். ஆனால் புதுக்கோட்டை- மானா மதுரை இடையே விதிகளுக்கு புறம்பாக அடுத்தடுத்து அதாவது 23 கிலோ மீட்டர் தூரத்தில் 2 சுங்கச்சாவடிகள் உள்ளன.
இதனால் எங்கள் கிராமத் தினர் பெரும் நஷ்டத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளா கின்றனர். எனவே செண்பகப் பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற உத்தரவிட வேண் டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மாற்றியமைக்க உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.
முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “விதிகளை மீறி 60 கிலோமீட்டர் தூரத்துக்குள் 2 சுங்கச்சாவடிகள் அமைந்திருக் கும்பட்சத்தில், தூரத்தை கருத்தில் கொண்டு அவற்றின் சுங்க கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும். 60 நாட்களுக்குள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தவறினால் புதுக்கோட்டை மாவட்டம் லெம்பக்குடி சுங்கச்சாவடி சட்டவிரோத மாக செயல்படுவதாக கருதப்படும். எனவே இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கையை மதுரை ஐகோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Related Tags :
Next Story