விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்விற்கு இணையதளம் மூலம் பயிற்சி
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்விற்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா ஊரடங்கினால் பயிற்சி வகுப்புகளை நடத்த முடியவில்லை. இதனால் தேர்வர்கள் வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் கிராமப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் இணையதளத்தில் உரிய செயலி மூலம் பயிற்சி அளிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையினரால் வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் இணையதளம் மூலம் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலைவாய்ப்பு அதிகாரிகள் கூறுகையில், www.tamilnaducareeserives.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், மின்புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. தேர்வர்கள் தங்களது பெயர், பாலினம், தந்தை, தாய் பெயர், முகவரி, ஆதார் எண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு எண்ணை கொடுத்து போட்டித்தேர்வு என்பதை தேர்வு செய்ய வேண்டும். மேலும் பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். நாம் எந்த தேர்வுக்கு தயாராகிறோம் என்பதை தேர்வு செய்து அதில் வரும் பாடக்குறிப்புகளை தமிழ், ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். தற்போது நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 04146226417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என்றனர்.

Related Tags :
Next Story