100 நாள் வேலை திட்டத்தில் கிராம மக்களுக்கு முறையாக வேலை வழங்காததால் போராட்டம்


100 நாள் வேலை திட்டத்தில் கிராம மக்களுக்கு முறையாக வேலை வழங்காததால் போராட்டம்
x
தினத்தந்தி 30 May 2020 10:30 AM IST (Updated: 30 May 2020 10:30 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்ட கிராம மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வேலை வழங்க கோரி போராட்டம் நடந்தது.

விருதுநகர்,

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கிராமப்பகுதிகளில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு முழுமையாக வேலை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம்தாகூரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆய்வு நடத்தியபோது 10 சதவீத பயனாளிகளுக்கே வேலை வழங்கப்பட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் 100 சதவீத வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதை தொடர்ந்து அனைத்து பஞ்சாயத்துகளிலும் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு முழுமையாக வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் பல்வேறு கிராமங்களில் முறையாக வேலை வழங்காத நிலையில் கிராமமக்கள் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. காரியாபட்டி யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விருதுநகர் அருகே வழுக்கலொட்டி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். விருதுநகர் யூனியனில் உள்ள மெட்டுக்குண்டு கிராமத்தில் 350 பேர் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள நிலையில் 125 பேருக்கே வேலை வழங்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் வேலை வழங்க கோரி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம், 100 நாள் வேலை திட்ட பயனாளிகளின் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story