காரிக்கூட்டத்தில் கொத்துக்கொத்தாய் பேரீச்சம்


காரிக்கூட்டத்தில் கொத்துக்கொத்தாய் பேரீச்சம்
x
தினத்தந்தி 30 May 2020 10:44 AM IST (Updated: 30 May 2020 10:45 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம்-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காரிக்கூட்டத்தில் உள்ள காதரியப்பா தர்கா வளாகத்தில் இருக்கும் பேரீச்ச மரத்தில் பேரீச்சம் கொத்துக்கொத்தாக காய்த்துள்ளன.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம்-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் காரிக்கூட்டத்தில் அமைந்துள்ளது காதரியப்பா தர்கா. இந்த தர்கா வளாகத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக தானாக பேரீச்சம்மரம் வளர்ந்துள்ளது. சுமார் 10 அடி உயரத்துக்கும் அதிகமாக வளர்ந்துள்ள இந்த மரத்தில் தற்போது பேரீச்சம் கொத்துக்கொத்தாக காய்த்துள்ளன. இதனை காரிக்கூட்டம் ஜமாத் தலைவர் நூர்முகமது, வக்கீல் சண்முகநாதன் உள்பட பொதுமக்கள் பார்வையிட்டனர். அரபு நாடுகள் மற்றும் பாலைவன பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய இந்த அரிய வகை பேரீச்சம் மரம் ராமநாதபுரம் பகுதியில் நன்கு வளர்ந்துள்ளதை சுற்று வட்டார கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர். மேலும் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புநீராக மாறியுள்ள நிலையில் இந்த தர்கா வளாகத்தில் உள்ள கிணற்றில் மட்டும் சுவை மிகுந்த நல்ல நீர் கிடைக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் தங்களது குடிநீர் தேவைக்கு நீண்ட தூரம் உள்ள இந்த தர்காவுக்கு வந்து குடங்களில் தண்ணீர் எடுத்துச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Next Story