பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 May 2020 5:50 AM GMT (Updated: 30 May 2020 5:50 AM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில், புதிதாக திறக்கப்பட்ட 2 டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில், புதிதாக திறக்கப்பட்ட 2 டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் கடை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த 2 மாதத்திற்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில், சில விதிமுறைகளின்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்தில் 35 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி அம்மாபாளையத்தில் புதிதாக ஒரு டாஸ்மாக் கடையும், பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிப்பாளையத்தில் நேற்று ஒரு டாஸ்மாக் கடையும் திறக்கப்பட்டன. இந்த கடைகளில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள இந்த கால கட்டத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூட வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், 2 மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழ்நிலையில் புதிதாக 2 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில குடும்ப தலைவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை அடமானம் வைத்து மது குடிக்கிறார்கள்.

இதனால், பல குடும்பங்களில் சண்டை-சச்சரவுகள் ஏற்படுகிறது. ஆகவே, புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story