கர்நாடகத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா - பெங்களூருவில் ஒரே நாளில் 33 பேருக்கு வைரஸ் பாதிப்பு


கர்நாடகத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா  - பெங்களூருவில் ஒரே நாளில் 33 பேருக்கு வைரஸ் பாதிப்பு
x
தினத்தந்தி 31 May 2020 4:45 AM IST (Updated: 31 May 2020 12:58 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஒரே நாளில் புதிதாக 141 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூருவை சேர்ந்த 33 பேரும் அடங்குவர்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 2,730 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 141 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் 90 பேர் மராட்டியம் உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,871 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு நேற்று பீதர் மாவட்டத்தை சேர்ந்த 47 வயது பெண் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 51 அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் இதுவரை 997 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,874 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பெங்களூரு நகரில் 33 பேர், கலபுரகியில் 2 பேர், யாதகிரியில் 18 பேர், உடுப்பியில் 13 பேர், ஹாசனில் 13 பேர், தாவணகெரேயில் 4 பேர், பெலகாவியில் ஒருவர், பீதரில் 10 பேர், தட்சிண கன்னடாவில் 14 பேர், விஜயாப்புராவில் 11 பேர், மைசூருவில் 2 பேர், உத்தரகன்னடாவில் 2 பேர், தார்வாரில் 2 பேர், சிவமொக்காவில் 6 பேர், சித்ரதுர்காவில் ஒருவர், துமகூருவில் ஒருவர், கோலாரில் 3 பேர், பெங்களூரு புறநகரில் ஒருவர், ஹாவேரியில் 4 பேர் உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் நேற்று மட்டும் 15 ஆயிரத்து 728 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 28 ஆயிரத்து 538 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 33 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பெங்களூரு நகரவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Next Story