திருக்கழுக்குன்றம் அருகே வீடியோ பதிவு செய்து விட்டு லாரி டிரைவர் தற்கொலை
திருக்கழுக்குன்றம் அருகே வீடியோ பதிவு செய்து விட்டு லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம்,
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 42). லாரி டிரைவரான இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் அண்ணன் தம்பிகளான கண்ணன் (38) மற்றும் கன்னியப்பன் (37) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களில் கண்ணன், அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். கன்னியப்பன் டீக்கடை நடத்தி வருகிறார்.
ஹரிகிருஷ்ணனுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களான கண்ணன் மற்றும் கன்னியப்பனுக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஹரிகிருஷ்ணன் தனது வீட்டில் உள்ள குப்பைகளை கண்ணன் வீட்டின் அருகே போட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
ஏற்கனவே நிலப்பிரச்சினை தொடர்பாக மன உளைச்சலில் இருந்த ஹரிகிருஷ்ணன், இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளானார். அவரது மனைவி மற்றும் மகள் வெளியூர் சென்றிருந்தனர். பக்கத்து வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையை மனைவிக்கு தொலைபேசியில் தெரிவித்த ஹரிகிருஷ்ணன், உடனே அவரை வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது மனைவி வீட்டுக்கு வந்துள் ளார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் தனது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத் தினர் உதவியு டன் அவரை மீட்டு சிக்ச்சைக் காக திருக்கழுக்குன்றம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென் றார். அங்கு அவரை பரி சோதித்த டாக்டர்கள் ஹரி கிருஷ்ணன் ஏற்கனவே உயிரி ழந்து விட்டதாக தெரிவித்த னர்.
ஹரிகிருஷ்ணன் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் பேசி வீடியோ வாக பதிவு செய்துள் ளார். அதில்தான் தற்கொலை செய்து கொள்வதற்கான கார ணம் குறித்து கூறி இருப்பதாக தெரிகிறது.
இது குறித்து வீடியோ பதிவுடன் புகார் செய்ததன் பேரில் திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் வாசுதேவன் ஆகி யோர் வழக்குப்பதிவு செய்து அண்ணன் தம்பிகளான கண் ணன், கன்னியப்பன் இருவ ரையும் கைது செய்தனர்.

Related Tags :
Next Story