நாகர்கோவில் -திருச்சி சிறப்பு ரெயிலுக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
நாகர்கோவில்-திருச்சி சிறப்பு ரெயிலுக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
நெல்லை,
நாகர்கோவில்-திருச்சி சிறப்பு ரெயிலுக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
ரெயில் போக்குவரத்து
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையொட்டி பயணிகளுக்கான ரெயில், பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது.
இந்த நிலையில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் 4 வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
டிக்கெட் முன்பதிவு
இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதோடு, நேற்று மாலை 4 மணி முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங் கப்பட்டது.
அதாவது ரெயில் கள் இயக்கப்படும் வழித்தடத்தில் அந்த ரெயில் நிறுத்தப்படும் நிலையங்களில் மட்டும் முன்பதிவு தொடங்கப்பட்டது.
அதன்படி திருச்சி -நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நெல்லை சந்திப்பில் நின்று செல்லும் என்பதால், நேற்று மாலை 4 மணிக்கு அங்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
புதிய நுழைவு வாசல் பகுதியில் அமைந்திருக்கும் முன்பதிவு கவுன்ட்டருக்கு ஒரு சில பயணிகள் வந்தனர். அவர்கள் ரெயில் புறப்படும் நேரம், டிக்கெட் விவரங்களை கேட்டு, முன்பதிவு செய்தார்கள்.
இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பயணிகள் சமூக இடைவெளியுடன் நின்று டிக்கெட் முன்பதிவு செய்வதை கண்காணித்தனர்.
மேலும் ரெயில் நிலையத்தில் கூட்டம் சேருவதை தவிர்க்கும் வகையில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
ரெயில் வருகை நேரம்
திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண் 02627) காலை 11.05 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வருகிறது. மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.
Related Tags :
Next Story