தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன், அமைச்சர் ஆலோசனை கொரோனா பரிசோதனை கட்டணம் குறைகிறது


தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன், அமைச்சர் ஆலோசனை கொரோனா பரிசோதனை கட்டணம் குறைகிறது
x
தினத்தந்தி 31 May 2020 12:20 AM GMT (Updated: 31 May 2020 12:20 AM GMT)

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் 40-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் நேற்று காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

கொரோனா பரிசோதனை செய்யும் தனியார் மருத்துவமனைகள் தற்போது மத்திய அரசு நிர்ணையித்துள்ள ரூ.4 ஆயிரத்து 500 வசூலித்து கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்களின் நலனுக்காக கட்டணத்தை குறைக்க அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.

இதையடுத்து ஓரிரு நாளில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story