இளம்பெண்ணுக்கு கொரோனா: வள்ளியூரில் சுகாதார பணிகள் தீவிரம் தடுப்புகளால் தெருவை அடைத்த போலீசார்
வள்ளியூரில் இளம்பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
வள்ளியூர்,
வள்ளியூரில் இளம்பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இளம்பெண்ணுக்கு கொரோனா
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள கடை ஒன்றில் வள்ளியூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த இளம்பெண் காய்ச்சல் ஏற்பட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால், காய்ச்சல் குணமடையாததால் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தினர்.
இதையடுத்து அந்த பெண் பணகுடி அரசு ஆஸ்பத்திரியில் சளி மாதிரி பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனை முடிவில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பெண் வசிக்கும் தெரு தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் போலீசார் தடுப்புகளால் அந்த தெருவை அடைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுகாதார பணிகள் தீவிரம்
சுகாதார துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு சுகாதார பணிகளை தீவிரப்படுத்தினர். கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு, பிளச்சிங் பவுடர் தூவப்பட்டது. அந்த இளம்பெண் வேலை பார்த்து வந்த கடை மற்றும் பக்கத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட அந்த பெண் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணிற்கு கொரோனா எப்படி தாக்கியது? என்பது பற்றி சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story