மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 2,940 பேருக்கு தொற்று உறுதி கொரோனா பாதிப்பு 65 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 99 பேர் பலி + "||" + New in Maratham 2,940 people confirmed the infection Corona impacts exceed 65 thousand 99 killed

மராட்டியத்தில் புதிதாக 2,940 பேருக்கு தொற்று உறுதி கொரோனா பாதிப்பு 65 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 99 பேர் பலி

மராட்டியத்தில் புதிதாக 2,940 பேருக்கு தொற்று உறுதி கொரோனா பாதிப்பு 65 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 99 பேர் பலி
மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு 65 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மேலும் ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 940 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்து 168 ஆக உயர்ந்து உள்ளது.


இதேபோல நேற்று ஒரேநாளில் 99 பேர் உயிரிழந்தனர். இதுவரை மராட்டியத்தில் 2 ஆயிரத்து 197 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

28 ஆயிரத்து 81 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நாட்டிலேயே மராட்டியத்தில் தான் அதிகப்பட்சமாக 4 லட்சத்து 33 ஆயிரத்து 557 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பையை பொறுத்தவரை நேற்று புதிதாக 1,510 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 442 ஆகியுள்ளது. இதேபோல நகரில் மேலும் 54 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை மும்பையில் 1,227 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர்.

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புகுறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 3,572 (77 பேர் பலி), தானே புறநகர் - 614 (7), நவிமும்பை மாநகராட்சி - 2,617 (52), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 1,240 (21), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 313 (6), பிவண்டி மாநகராட்சி - 120 (6), மிரா பயந்தர் மாநகராட்சி - 647 (13), வசாய் விரார் மாநகராட்சி - 827 (27), ராய்காட் - 574 (18),

பன்வெல் மாநகராட்சி - 468 (21). மாலேகாவ் மாநகராட்சி - 747 (52). புனே மாநகராட்சி - 6,583 (300), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 450 (9), சோலாப்பூர் மாநகராட்சி - 826 (66), அவுரங்காபாத் மாநகராட்சி - 1,425 (64), நாக்பூர் மாநகராட்சி - 539 (10).

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக 5 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா 181 பேர் பலி
மராட்டியத்தில் புதிதாக 5 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 181 பேர் பலியாகி உள்ளனர்.
2. மராட்டியத்தில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் மேலும் 5 ஆயிரத்து 493 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
3. மராட்டியத்தில் மேலும் 3,721 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 3,721 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் பருவமழை தீவிரம் - மும்பையில் வீடு இடிந்து 3 பேர் காயம்
மராட்டியத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதன் மூலம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. மும்பையில் வீடு இடிந்து 3 பேர் காயம் அடைந்தனர்.
5. மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 120 பேர் பலி - மாநகராட்சி துணை கமிஷனர், கவுன்சிலரும் உயிரிழப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மாநகராட்சி துணை கமிஷனர், கவுன்சிலர் உள்பட 120 பேர் ஒரே நாளில் பலியானார்கள்.