ஊரடங்கால் பழ கடைக்காரர்கள் வருமானமின்றி தவிப்பு
கோபியில், ஊரடங்கால் பழ கடைக்காரர்கள் வருமானமின்றி தவித்து வருகிறார்கள்.
கோபி,
கோபியில், ஊரடங்கால் பழ கடைக்காரர்கள் வருமானமின்றி தவித்து வருகிறார்கள்.
பழ கடைக்காரர்கள்
கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் மாம்பழம், நெல்லிக்காய், திராட்சை, பப்பாளி, முலாம் பழங்கள் உள்ளிட்ட பழக்கடைகள் உள்ளன. தள்ளுவண்டி கடைகளிலும் பழங்கள் வைத்து விற்பனை செய்கிறார்கள்.
பழங்கள் ஈரோடு உள்ளிட்ட ஊர்களில் இருந்து வாங்கி விற்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கால் பழக்கடைக்காரர்கள் வருமானமின்றி தவித்து வருகிறார்கள்.
இதுபற்றி பழக்கடைக்காரர்கள் கூறும்போது, ‘கோபி நகரத்தில் 10 அல்லது 20 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி மாற்றி சென்று ரோட்டோரம் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் யாரும் வாங்காததால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வசதி இல்லாததால் வட்டிக்கு கடன் வாங்கி சிலர் தொழில் செய்து வருகிறார்கள். குடும்பத்தோடு இந்த தொழிலில் ஈடுபடுகிறோம்.
வருமானமின்றி தவிப்பு
ஊரடங்கு இல்லாத போது ஓரளவுக்கு நல்ல வருமானம் இருந்தது. தற்போது இந்த 2 மாத காலத்தில் கடை போடாததால் ஆயிரக்கணக்கில் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பழக்கடைகளை தவிர வேறு வழிகளில் எங்களுக்கு வருமானம் இல்லை. பழக்கடைகளை வைத்துதான் குடும்பத்தை நடத்த வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும். எனவே அரசு எங்களுக்கு நிவாரண உதவி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.
Related Tags :
Next Story