188 பெண் போலீசாருக்கு கோவை, ஆவடியில் பயிற்சி வேலூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்
188 பெண் போலீசாருக்கு கோவை, ஆவடியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக அவர்கள் வேலூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
வேலூர்,
188 பெண் போலீசாருக்கு கோவை, ஆவடியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக அவர்கள் வேலூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெண் போலீசார்
இரண்டாம் நிலை பெண் போலீசாருக்கான தேர்வில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 1,88 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்கள் பயிற்சி பெற கோவை, தூத்துக்குடி, ஆவடி உள்ளிட்ட பயிற்சி மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவியதாலும், வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாலும் தேர்ச்சி பெற்ற பெண் பயிற்சி போலீசார் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாத சூழல் உருவானது.
இதனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற பெண் காவலர்கள் 188 பேருக்கு வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த 1 மாத காலமாக ஒருங்கிணைப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
அறிவுரை
அதோடு இவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 28 நாட்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாலும், இவர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் தெற்று இல்லை என்பதாலும் வேலூரில் பயிற்சி பெற்று வந்த 1,88 பெண் போலீசார், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பயிற்சி மையங்களுக்கு நேற்று காலை வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இருந்து காவல்துறை வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு கோவைக்கு 183 பேரும், தூத்துக்குடிக்கு 2 பேரும், ஆவடிக்கு 3 பேரும் சென்றனர். முன்னதாக அவர்களுக்கு காவல்துறை உயர்அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
Related Tags :
Next Story