தலவார், பரிவார் சமூகங்கள் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பு முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா நன்றி


தலவார், பரிவார் சமூகங்கள் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பு முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா நன்றி
x
தினத்தந்தி 1 Jun 2020 4:30 AM IST (Updated: 1 Jun 2020 1:57 AM IST)
t-max-icont-min-icon

தலவார், பரிவார் சமூகங்கள் பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்பட்டதற்காக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா நன்றி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி, பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த ஊக்குவிக்கிறார். இது ஏழை மக்களை வெகுவாக பாதிக்கும். ஏனென்றால் அவர்கள் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இல்லை. அத்தகைய போன்கள் இருந்தாலும், வேகமான இணையதள வசதி அந்த மாணவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

பரிவார், தலவார் சமூகங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

ஆனால் மாநில அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதி, அந்த பரிவார், தலவார் சமூகங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

இந்த நிலையில் கர்நாடக அரசு அந்த சமூகங்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது. இதற்காக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது இதற்கு மந்திரிசபையில் அனுமதி பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story