அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்த முயன்ற 13 பேர் கைது


அனுமதியின்றி  மாட்டுவண்டி பந்தயம் நடத்த முயன்ற 13 பேர் கைது
x
தினத்தந்தி 31 May 2020 10:03 PM GMT (Updated: 2020-06-01T03:33:29+05:30)

அலங்காநல்லூர் அருகே அரசு அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்த முயன்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

அலங்காநல்லூர், 

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அலங்காநல்லூர் அருகே அரசு அனுமதியின்றி குமாரம், நகரி சாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடக்க போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது போட்டிக்கு தயாராக இருந்த 4 மாட்டு வண்டிகள் மற்றும் 5 மினி வேன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மாட்டு வண்டி பந்தய போட்டிக்கான ஏற்பாடுகளை செய்த பரவை, ஆனையூர், கூடல்நகர் பகுதிகளை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த மாட்டுவண்டி பந்தயம் நடைபெறாமல் போனதால் ஏராளமான பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story