சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் வைகாசி திருவிழா ரத்து


சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில்  வைகாசி திருவிழா ரத்து
x
தினத்தந்தி 1 Jun 2020 5:33 AM IST (Updated: 1 Jun 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் வைகாசி திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சிங்கம்புணரி,

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் சாமி பூரண புஷ்கலை தேவியருடன் சிங்கம்புணரி பகுதி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இப்பகுதியில் பலதரப்பட்ட மக்களின் குலதெய்வமாக பல கிராமத்தினர் வணங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் வைகாசி மாதம் வைகாசி உற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும். பல நூறு ஆண்டுகளாக இந்ததிருவிழா சிங்கம்புணரி பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு வைகாசி உற்சவ திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் தீபாராதனை மட்டும் செய்தனர்.

Next Story