வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்


வீட்டிற்குள் புகுந்த பாம்பு  தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்
x
தினத்தந்தி 1 Jun 2020 6:01 AM IST (Updated: 1 Jun 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் அய்யனார், கூலி தொழிலாளி. இவரது வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதைதொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினார்கள். பின்னர் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறை அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த நல்ல பாம்பு தீயணைப்புத்துறையினரை பார்த்தவுடன் வீட்டின் ஒரு அறைக்குள் சென்று பதுங்கி கொண்டது. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புத்துறையினர் சுமார் 4½ அடி நீள நல்ல பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை ஒதுக்குப்புறமான கண்மாய் பகுதியில் கொண்டு போய் விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Next Story