தாராவியில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு


தாராவியில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2020 6:27 AM IST (Updated: 1 Jun 2020 6:27 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை,

மும்பையில் தமிழர்கள் அதிகளவில் உள்ள தாராவி குடிசைப்பகுதியில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் நேற்று தாராவியில் புதிதாக 38 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,771 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 71 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர்.

இதேபோல நேற்று மாகிமில் 23 பேரும், தாதரில் 10 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முறையே 507, 319 ஆக உயர்ந்து உள்ளது.

தாராவியில் சுகாதாரப்பணியாளர்கள் இதுவரை உடல் வெப்பத்தை கண்டறியும் தெர்மல் கருவி மூலம் மட்டுமே பொது மக்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என சோதனை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முதல் இங்கு சுகாதாரப்பணியாளர்கள் ரத்த பரிசோதனை மூலம் பொது மக்களுக்கு நோய் அறிகுறி உள்ளதா என கண்டறிய தொடங்கி உள்ளனர். தாராவி சாஸ்திரி நகர் பகுதியில் நேற்று சுகாதாரப்பணியாளர்கள் சந்தேகப்படும் நபர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டனர்.

Next Story