நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதைய நிலை நீடிக்கும்: தனியார் அலுவலகங்களில் 1 சதவீத ஊழியர்களுடன் பணி மும்பையில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி - பல்வேறு தளர்வுகள் அறிவிப்பு


நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதைய நிலை நீடிக்கும்: தனியார் அலுவலகங்களில் 1  சதவீத ஊழியர்களுடன் பணி மும்பையில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி - பல்வேறு தளர்வுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2020 7:05 AM IST (Updated: 1 Jun 2020 7:05 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பெருநகர பகுதியில் அனைத்து கடைகள், சந்தைகளை திறக்கவும், தனியார் அலுவலகங்கள் 1 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும், மைதானங்களில் உடற்பயிற்சிக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சலூன் கடைகள், அழகு நிலையங்கள், வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மும்பை,

கொரோனா நோய்க்கிருமி பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 4வது கட்ட ஊரடங்கு நேற்று முடிவுக்கு வந்தது.

நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் கொரோனாவின் தாக்கமும், உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு ஊரடங்கை இந்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டித்தது. ஆனால் நிபந்தனைகளுடன் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. மேலும் ஊரடங்கில் தளர்வு குறித்து மாநில அரசுகளே முடிவு எடுத்து கொள்ள அனுமதி அளித்தது.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள மராட்டியத்தில் வருகிற 3-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து நேற்று மாநில அரசு உத்தரவிட்டது.

அதே வேளையில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. இந்த தளர்வுகள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மும்பை பெருநகர பகுதி, புனே, சோலாப்பூர், மாலேகாவ், துலே, நாசிக் ஆகிய பகுதிகளுக்கும் பொருந்தும். ஆனால் இங்குள்ள நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதைய நிலையே நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு அறிவித்த தளர்வுகள் வருகிற 3, 5, 8-ந் தேதிகளில் என 3 கட்டமாக அமல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக 3-ந் தேதி அமலுக்கு வர உள்ள தளர்வுகள் விவரம்:-
* விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், நடைபாதை உள்ளிட்ட இடங்களில் காலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி, தனிநபர் உடற்பயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை உறுதி செய்யும் என்பதால் பொதுமக்கள் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

விளையாட்டு அரங்குகள், விளையாட்டு மையங்கள், கிளப்களில் உள்ள திறந்தவெளி மைதானங்கள், கோல்ப் மைதானங்கள் தனிநபர்கள் உடற்பயிற்சி செய்வதற்காக திறந்து வைக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் பார்வையாளர்கள், குழு நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை. இதேபோல பொது மக்கள் வீட்டின் அருகில் உள்ள மைதானங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும். நீண்ட தூரத்தில் உள்ள மைதானங்களுக்கு செல்ல கூடாது.

* பிளம்பர், எலெக்ட்ரீசியன், பூச்சி கொல்லி தொழில் செய்பவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பணி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

* ஒர்க் ஷாப்களில் பணிகள் தொடரலாம்.

* அரசு அலுவலகங்கள் 15 சதவீத ஊழியர்கள் அல்லது குறைந்தது 15 பேருடன் செயல்படலாம்.

வருகிற 5-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ள தளர்வுகள் விவரம்:-
* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிபந்தனைகளை பின்பற்றி அனைத்து மார்க்கெட் மற்றும் கடைகளை திறக்கலாம். இவை ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒரு நாள் திறக்க அனுமதிக்கப்படும். பொதுமக்கள் அருகில் உள்ள மார்க்கெட் பகுதிகளில் பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* ஜவுளிக்கடைகளில் ஆடை மாற்றும் அறைகள் (டிரெயல் ரூம்) செயல்பட அனுமதி இல்லை. இதேபோல வாடிக்கையாளர்கள் ஒரு முறை வாங்கிய உடைகளை மாற்ற அனுமதிக்க கூடாது. கடை உரிமையாளர்கள் சமூக இடைவெளியை உறுதி செய்யவேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறைகள், டெலிவரி போன்றவற்றை பின்பற்றலாம்.

* டாக்சி, ஆட்டோ, கார்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் டிரைவருடன் சேர்த்து 3 பேர் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும்.

வருகிற 8-ந் தேதி முதல் அமலுக்கு வரும் தளர்வுகள் விவரம்:-
* தனியார் அலுவலகங்கள் 1  சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். மற்ற ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.

* நோய் பாதிப்பு குறைந்த பகுதிகளில் அந்தந்த மாவட்டத்துக்குள் 5  சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்கலாம். மாவட்டங்களுக்கு இடையே பஸ்களை இயக்க முடியாது.

மாநிலத்தில் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளவைகள் விவரம்:-
பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி வகுப்புகள். சர்வதேச விமான போக்குவரத்து. மெட்ரோ ரெயில் சேவை. திரையரங்குகள், ஜிம், நீச்சல் குளம், கேளிக்கை பூங்கா, மதுபான விடுதி, சமூக, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு நிகழ்ச்சிகள், வழிபாட்டு தலங்கள், சலூன், அழகு நிலையங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், விடுதி.

மேற்கண்டவாறு அரசு தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநில அரசின் இந்த உத்தரவு இன்று (1-ந் தேதி) முதல் 3-ந் தேதி முதல் அமலில் இருக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்தும் பின்பற்றப்படும். இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எந்த காரணங்களுக்காகவும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மற்ற நோய் பாதிப்பு உள்ளவர்கள், 1  வயதுக்கு குறைந்த சிறுவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்.

நோய் கட்டுப்பாட்டு மண்டங்களில் இருந்து பொது மக்கள் வெளியேறுவதையும், மற்றவர்கள் உள்ளே செல்வதையும் கடுமையான நடவடிக்கைகளுடன் உறுதிப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story