தேன்கனிக்கோட்டை அருகேஏரியில் உற்சாக குளியல் போட்ட யானைகள்


தேன்கனிக்கோட்டை அருகேஏரியில் உற்சாக குளியல் போட்ட யானைகள்
x
தினத்தந்தி 1 Jun 2020 7:16 AM IST (Updated: 1 Jun 2020 7:16 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் யானைகள் குட்டிகளுடன் உற்சாகமாக குளியல் போட்டன.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஜவளகிரி வனப்பகுதியில் காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீரை தேடி இந்த காட்டுயானைகள் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிகின்றன.

மேலும் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறை சார்பில் வனப்பகுதிகளிலுள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு அங்கு மழைநீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் ஊற்றி வைத்துள்ளனர். இதில் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் குடித்தும், குளித்தும் செல்கின்றன. 

Next Story