இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடக்கம்: நாமக்கல் பஸ்நிலையத்தில் தடுப்புகள் அகற்றம்


இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடக்கம்: நாமக்கல் பஸ்நிலையத்தில் தடுப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 1 Jun 2020 7:40 AM IST (Updated: 1 Jun 2020 7:40 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட மஜித்தெரு, பாவடிதெரு, சுண்ணாம்புகார தெரு உள்ளிட்ட பகுதிகளில் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டன.

நாமக்கல்,

நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையமும் அந்த பகுதியில்  அமைந்து உள்ளது. இதையடுத்து பஸ்நிலையத்தின் நுழைவுவாயில் மற்றும் பஸ் வெளியேறும் பகுதிகள் தகரம் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டது. கடந்த 2 மாதமாக இந்த தடை நீடித்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நோய் தடுப்பு மண்டலத்தில் இருந்து இப்பகுதி தளர்த்தப்பட்ட போதும், பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட தடையை அகற்றாமல் இருந்தனர். இதன் தொடர்ச்சியாக நகராட்சி சார்பில் பஸ்நிலைய வளாகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே தமிழக அரசு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர அனைத்து பகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) முதல் பஸ் போக்குவரத்து தொடங்கும் என அறிவித்து உள்ளது.

இதை தொடர்ந்து நாமக்கல் பஸ்நிலையத்தில் நுழைவுவாயில் மற்றும் பஸ்கள் வெளியேறும் பகுதியில், தகரத்தால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் நேற்று மாலையில் அகற்றப்பட்டன. இன்று முதல் பஸ்நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story