மீன், இறைச்சி கடைகள் திறப்பு விலை உயர்வால் மக்கள் ஏமாற்றம்


மீன், இறைச்சி கடைகள் திறப்பு  விலை உயர்வால் மக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 1 Jun 2020 4:00 AM GMT (Updated: 1 Jun 2020 4:00 AM GMT)

திண்டுக்கலில் 2 மாதங்களாக மூடிக்கிடந்த மீன், இறைச்சி கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

திண்டுக்கல், 

கொரோனா ஊரடங்கு காரணமாக திண்டுக்கல் நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் விரும்பியதை சாப்பிட முடியாமல் தவித்தனர். இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதால் 2 மாதங்களாக மூடிக்கிடந்த மீன், இறைச்சி கடைகள் நேற்று நகர் முழுவதும் திறக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் மீன், ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி வாங்குவதற்கு கடைகளுக்கு சென்றனர். ஆனால், அவற்றின் விலையை கேட்டதும் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஊரடங்கு காலத்தில் இருந்ததை விட விலை அதிகமாக விற்கப்பட்டது. இதில் குறிப்பாக ஆட்டு இறைச்சியை பொறுத்தவரை ஊரடங்கு தொடக்கத்தில் தற்காலிக கடைகளில் கிலோ ரூ.1,000-க் கும், பின்னர் ரூ.800-க்கும் விற்கப்பட்டது. ஆனால், நேற்றைய தினம் திண்டுக்கல் நகரில் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.1,100 வரை விற்கப்பட்டது. அதேநேரம் திண்டுக்கல் அருகேயுள்ள கிராமங்களில் ரூ.700-க்கு விற்கப்பட்டது. இதேபோல் கறிக்கோழி, மீன்கள் விலையும் அதிகமாக இருந்தது.

Next Story