பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகள் அவசரகால உதவிக்குழு சார்பில் வழங்கப்பட்டது
கொடைக்கானல் நகரில் பழங்குடியினருக்கு அவசரகால உதவிக்குழு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகரில் உள்ள அவசரகால உதவி குழுவின் சார்பில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் வசிப்பவர்களில் 2 ஆயிரம் பேருக்கு இதுவரை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சாலை வசதியே இல்லாத வடகவுஞ்சி ஊராட்சி கருவேலம்பட்டியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அவசரகால உதவி குழுவினர் நேரடியாக சென்று அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் அமைதி தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவபாலன் வரவேற்றார். போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அப்பகுதி மக்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அவசரகால உதவிகுழுவை சேர்ந்த அப்பாஸ், அந்தோணி, ஜமால், நடராஜன், கணேசன், நகராட்சி ஒப்பந்தக்காரர் அரசகுமார், இளநிலை உதவியாளர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் துரைபாண்டி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story