கும்பகோணம் கோட்டத்தில் 1,600 பஸ்கள் இயக்கம்


கும்பகோணம் கோட்டத்தில் 1,600 பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 1 Jun 2020 5:15 AM GMT (Updated: 2020-06-01T10:45:07+05:30)

கும்பகோணம் கோட்டத்தில் 1,600 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கும்பகோணம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இந்த முதல் கட்ட ஊரடங்கு 21 நாட்கள் நீடித்தது. ஊரடங்கையொட்டி பஸ், ரெயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. 21 நாட்கள் முதல் கட்ட ஊரடங்கிற்கு பிறகு அடுத்தடுத்து ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டது.

அதன்படி நீட்டிக்கப்பட்ட 4-வது கட்ட ஊரடங்கு நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து மத்திய அரசு 5-வது கட்ட ஊரடங்கை பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்துள்ளது. ‘அன்லாக் 1.0’ என்ற பெயரில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது. புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்வதற்காக சிறப்பு ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதில் இருந்து 68 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் பஸ் போக்குவரத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டத்தில் உள்ள கும்பகோணம், திருச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர் ஆகிய 6 மண்டலங்களிலும் இன்று பஸ் போக்குவரத்து தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நேற்று நடந்தன.

இதுகுறித்து கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

கும்பகோணம் கோட்டத் தில் உள்ள 6 போக்குவரத்து மண்டலங்கள் மூலமாக 3,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப் பட்ட நிலையில் இன்று முதல் கும்பகோணம் கோட்டத்தில் 50 சதவீத பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1,600 பஸ்கள் இயக்கப்படும். அந்தந்த போக்குவரத்து கிளை மேலாளர்கள் பஸ்களின் இயக்கத்தை கண்காணிப் பாளர்கள். நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

கும்பகோணம் மண்டலத் தில் மட்டும் 250 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து மண்டல மேலாளர் ஜெபராஜ் கூறியதாவது:-

கும்பகோணம் மண்டலத் தில் 460 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் பல்வேறு பணிமனைகளில் இருந்து 250 பஸ்கள் இன்று காலை முதல் இயக்கப்பட உள்ளன. அனைத்து பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட் டுள்ளது.

கும்பகோணம் மண்டலத் தில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படும்.

ஒவ்வொரு பஸ்களிலும் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க விதிமுறை களை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு முக கவசம், கையுறை, சோப்பு, சத்து மாத்திரைகள் வழங்கப்பட் டுள்ளன. டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் போக்கு வரத்துக்கழக பணியாளர் களுக்கு தேவை யான சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவை போக்கு வரத்துக்கழக அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பஸ்களிலும் 60 சதவீத பயணி கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story