உவரி அருகே 7 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன
உவரி அருகே 7 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன. அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
திசையன்விளை,
இதற்கிடையே நேற்று மதியம் கொரோனா பாதித்த பெண்ணின் உடல், நாகர்கோவிலை அடுத்த புளியடியில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகன மையத்தில் எரிக்கப்பட்டது.
நவ்வலடியில் அந்த பெண்ணின் வீடு உள்பட 4 வீடுகளிலும், பெண்ணின் உறவினர்கள் வசித்து வரும் ராமன்குடியில் 3 வீடுகளிலும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர் ஒட்டினர்.
மேலும் அங்கு தீயணைப்பு துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்த 37 வயது பெண், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் திருப்போரூரில் மரணம் அடைந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் உவரி போலீசார் விரைந்து வந்தனர். அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் அவர் கொரோனாவால் உயிரிழந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நவ்வலடியில் உள்ள அந்த பெண்ணின் தெரு தனிமைப்படுத்தப்பட்டது. அவருடன் வந்த உறவினர்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அந்த பெண்ணின் உடலுடன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சென்ற உறவினர்கள் 6 பேருக்கு முதல்கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் உறவினர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் போலீசாருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே நேற்று மதியம் கொரோனா பாதித்த பெண்ணின் உடல், நாகர்கோவிலை அடுத்த புளியடியில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகன மையத்தில் எரிக்கப்பட்டது.
நவ்வலடியில் அந்த பெண்ணின் வீடு உள்பட 4 வீடுகளிலும், பெண்ணின் உறவினர்கள் வசித்து வரும் ராமன்குடியில் 3 வீடுகளிலும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர் ஒட்டினர்.
மேலும் அங்கு தீயணைப்பு துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
Related Tags :
Next Story