கூடங்குளம் முதல் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
கூடங்குளம் முதல் அணு உலையில் நேற்று மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வள்ளியூர்,
இந்த பணிகள் இன்னும் 2 மாத காலத்திற்குள் நிறைவு பெற்று மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
2-வது அணு உலையில் தற்போது 650 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்ததக்கது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 2 அணு உலைகளிலும் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது. 3, 4-வது அணுஉலை அமைப்பதற்கான கட்டுமான வேலைகளும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் முதல் அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும், எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காகவும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் இன்னும் 2 மாத காலத்திற்குள் நிறைவு பெற்று மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
2-வது அணு உலையில் தற்போது 650 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்ததக்கது.
Related Tags :
Next Story