குஜராத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 1,600 டன் சீனி வந்தது


குஜராத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு 1,600 டன் சீனி வந்தது
x
தினத்தந்தி 1 Jun 2020 12:04 PM IST (Updated: 1 Jun 2020 12:04 PM IST)
t-max-icont-min-icon

குஜராத் மாநிலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் மூலம் 1,600 டன் ரேஷன் சீனி வந்தது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பள்ளவிளையில் மத்திய அரசுக்கு சொந்தமான உணவு கிடங்கு அமைந்து உள்ளது. இந்த உணவு கிடங்குக்கு மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் இருந்து புழுங்கல் அரிசி, பச்சரிசி மற்றும் சீனி (சர்க்கரை) ஆகியவற்றை சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பி வைத்து வருகிறது.

இங்கு பாதுகாப்பாக வைக்கப்படும் உணவு பொருட்கள் தேவைக்கு ஏற்ப குமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநிலங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் மூலம் ரேஷன் அரிசி வந்தது.

இந்த நிலையில் அரிசியை தொடர்ந்து தற்போது சரக்கு ரெயில் மூலம் குஜராத் மாநிலத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 1,600 டன் சீனி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சரக்கு ரெயிலில் மொத்தம் 38 வேகன்களில் ரேஷன் சீனி கொண்டுவரப்பட்டு, நேற்று அதிகாலை நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

பின்னர் அந்த வேகன்களில் இருந்து லாரிகளில் சீனி மூடைகள் ஏற்றப்பட்டு, நாகர்கோவில் பள்ளிவிளையில் உள்ள மத்திய அரசின் உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டது.

Next Story