செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கலக்கம்
செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
செஞ்சி,
அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் வட மாநிலங்களுக்குள் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்துள்ளன. இதனால் விவசாயிகள் அச்சம் கொண்டு இருக்கிறார்கள். இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் என்று சொல்லப்படும் இந்த வகையானவை தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்று வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி நேற்று முன்தினம் தெரிவித்தார்.
அதேவேளையில் தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே வெட்டுக்கிளிகள் வருகை குறித்த அதிர்ச்சியான செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது. இருப்பினும் தமிழகத்தில் 250 வகையிலான உள்ளூர் வெட்டுக்கிளிகள் உள்ளன. இதில் நன்மை பயக்கும் வெட்டுக்கிளிகளும் அடங்கும். எனவே உள்ளூர் வெட்டுக்கிளிகளை பார்த்து விவசாயிகள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று வேளாண் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவித்து வருகின்றனர்.
எனினும் கொரோனா ஊரடங்கால் முடங்கி கிடந்த விவசாயிகளுக்கு, இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு என்பது, அவர்களது மனதை மேலும் பதைப்பதைக்க செய்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு தொடங்கி இருக்கிறது.
செஞ்சி அடுத்த பொன்பத்தி, அஞ்சாஞ்சேரி ஆகிய கிராமங்களில் உள்ள நெல் பயிர்களில் பச்சை நிறத்திலான வெட்டுக்கிளிகள் அதிகம் காணப்பட்டன. வடமாநில விவசாயிகளை கலக்கம் அடைய வைத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் தான் வந்துள்ளன என்று அதிர்ச்சியடைந்த விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையின் அறிவுறுத்தலின் பேரில், திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஸ்ரீதர், உதவி பேராசிரியர் சத்யா, துணை இயக்குனர் ஏழுமலை, உதவி இயக்குனர்கள் சுரேஷ், கருப்பையா, தொழில்நுட்ப மேலாளர் சுபாஷ் ஆகியோர் பொன்பத்தி கிராமத்துக்கு நேரில் சென்றனர். வெட்டுக்கிளிகள் இருந்த நெல் வயல்களை பார்வையிட்டனர். அப்போது பச்சை நிறத்தில் சிறிய வெட்டுக்கிளிகள் காணப்பட்டன.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மேற்படி வயல்களில் காணப்பட்ட பச்சை நிற சிறிய வெட்டுக்கிளிகள் சாதாரண வெட்டுகிளிகளே ஆகும். இது லோகஸ்ட் எனப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. ஆகையால் விவசாயிகள் இதுபற்றி அச்சப்பட தேவையில்லை. மேற்படி வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த அசடிராக்ஷன் 1000 பி.பி.எம். என்ற வேம்பு மருந்தினை ஒரு ஏக்கருக்கு 200 மில்லி அளவு அல்லது குளோர்பைரிபாஸ் ஒரு ஏக்கருக்கு 500 மில்லி என்கிற அளவில் தண்ணீர் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story