பணிகளை புறக்கணித்து மின்துறை ஊழியர்கள் தர்ணா


பணிகளை புறக்கணித்து மின்துறை ஊழியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 1 Jun 2020 11:18 PM GMT (Updated: 1 Jun 2020 11:18 PM GMT)

யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி புதுவையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி,

மத்திய அரசை கண்டித்து மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் வம்பாக்கீரபாளையத்தில் உள்ள மின்துறை அலுவலகத்தில் நேற்று ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணிகளை புறக்கணித்து திடீரென அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன், பொருளாளர் மதிவாணன், துணை பொதுச்செயலாளர் தணிகாசலம், துணைத்தலைவர்கள் முரளிதரன், உத்திராடம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மின் துறை ஊழியர்களின் இந்த போராட்டத்தால் மின் கட்டண வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. அவசர பணிகளைத் தவிர வேறு எந்த பணிகளையும் மின்துறை ஊழியர்கள் மேற்கொள்ளவில்லை.

Next Story