கன்னியாகுமரியில் ரூ.7 கோடியில் 2 துணை மின்நிலையம் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
கன்னியாகுமரியில் ரூ.7¼ கோடியில் அமைக்கப்பட்ட 2 துணை மின்நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் ரூ.7¼ கோடியில் அமைக்கப்பட்ட 2 துணை மின்நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
புதிய துணை மின்நிலையங்கள்
ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கன்னியாகுமரி பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான 18.5 சென்ட் இடத்தில் ரூ.5 கோடியே ஒரு லட்சத்து 33 ஆயிரம் செலவில் 33/11 கிலோவாட் திறன் கொண்ட புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது.
இதேபோல் கொட்டாரம் பகுதியில் ரூ.2 கோடியே 23 லட்சம் செலவில் 110/33 கிலோவாட் திறன் கொண்ட மற்றொரு புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த துணை மின்நிலையங்கள் மூலம் கன்னியாகுமரி, கொட்டாரம் என 2 பேரூராட்சிகள் மற்றும் பஞ்சலிங்கபுரம் பகுதிகளை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் வீட்டு இணைப்புகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், 500 வணிக நிறுவனங்கள் பயன் பெறும்.
திறப்பு விழா
இந்த 2 துணை மின்நிலையங்களின் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதேநேரம் கன்னியாகுமரி துணை மின்நிலையத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் குத்துவிளக்கேற்றி மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந் வடநேரே, பயிற்சி கலெக் டர் ரிசப் கங்கலியா, வசந்தகுமார் எம்.பி., ஆஸ்டின் எம்.எல்.ஏ., பால்வள தலைவரும், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.ஏ.அசோகன், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நீலபெருமாள், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெசீம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் தம்பிதங்கம், பேரூர் செயலாளர் சந்திரசேகரன், கன்னியாகுமரி செயலாளர் வின்ஸ்டன், ராஜபாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் முத்துசாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, கன்னியாகுமரி நகர செயலாளர் குமரி ஸ்டீபன், மாநில காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் வக்கீல் சீனிவாசன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) ராஜசேகர், செயற்பொறியாளர் தேன்மொழி, கொட்டாரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆன்டணி, கன்னியாகுமரி இளநிலை பொறியாளர் வினுகுமார், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், சுகாதார அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story