மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2020 2:55 AM GMT (Updated: 2 Jun 2020 2:55 AM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மின் வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, மின்சார சட்ட திருத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும், விவசாயம், நெசவுத்தொழில் போன்றவைகளுக்கு மானியத் திட்டங்களை முடக்கக் கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் கோரிக்கை அட்டை அணிந்து அலுவலகம் வந்தனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் செயற்பொறியாளர் அலுவலகம், நகர் துணை மின்நிலையம், வலையப்பட்டி துணை மின்நிலையம், குன்னூர், வத்திராயிருப்பு துணைமின் நிலையம் உள்ளிட்ட அலுவலகங்களில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செயற்பொறியாளர் கழக மாவட்ட துணைத்தலைவர் சுடலையாடும் பெருமாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொறியாளர்கள் கழகம் சார்பில் கல்யாணி பாண்டியன், சி.ஐ.டி.யூ. கோட்ட சங்க செயலாளர் ராஜாராம், ஐக்கிய மின் ஊழியர் சங்கத்தின் சார்பில் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் துணை மின்நிலையத்தில் தமிழ்நாடு மின்வாரிய பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யூ. சார்பில் ராமசாமி, ஐக்கிய மின் ஊழியர் சங்கம் சார்பில் பிரபுராம், தொ.மு.ச. சார்பில் ஜெயபால் உள்பட அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Next Story