சோழசிராமணி கதவணை பாலத்தில் பழுதடைந்த இணைப்பு சாலை சீரமைக்கும் பணி; கலெக்டர் நேரில் ஆய்வு
சோழசிராமணி கதவணை பாலத்தில் பழுதடைந்த இணைப்பு சாலை சீரமைக்கும் பணியை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரமத்தி வேலூர்,
நாமக்கல் மாவட்டத்தையும், ஈரோடு மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் சோழசிராமணியில் கதவணை மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த கதவணையில் வாகன போக்குவரத்துக்கான பாலம் உள்ளது.
இந்த பாலத்தை இணைக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் பாசூர் எல்லைக்குட்பட்ட இணைப்பு சாலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண் சரிவு ஏற்பட்டு திடீரென இணைப்புச்சாலை சேதம் அடைந்தது. இதனால் இரு சக்கர வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப் பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மின்சார துறை அமைச்சர் தங்கமணி உடனடியாக சோழசிராமணி சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்தி னார். பின்னர் சாலை சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கிட அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் ரூ.9 கோடி மதிப்பில் சாலை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை சீரமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மேற்பார்வை பொறியாளர் (நீர்மின் திட்டம்) ராமசந்திரன், செயற்பொறியாளர் பத்பநாபன், தலைமை பொறியாளர் தண்டபாணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story