சேலத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு


சேலத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 2 Jun 2020 3:24 AM GMT (Updated: 2 Jun 2020 3:24 AM GMT)

சேலத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலம் வருபவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என மாவட்ட எல்லைகளிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் பாதிக்கப்படுபவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர்.

வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் சேலத்தை சேர்ந்தவர்கள் என 49 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது, மராட்டியத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளாவில் இருந்து வந்த 2 பேர், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவர் என 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் சேலம் அழகாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர கொரோனாவால் பாதித்த பிற மாவட்டங்களை சேர்ந்த 7 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சேலம் மாநகர் மற்றும் மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் சுகாதார துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story