தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாளை, உதவி செய்ய உகந்த நாளாக மாற்ற வேண்டும் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. அறிக்கை
தி.மு.க. முன்னாள் தலைவர் மு.கருணாநிதி பிறந்தநாளை, உதவி செய்ய உகந்த நாளாக மாற்ற வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
க.பரமத்தி,
தி.மு.க. முன்னாள் தலைவர் மு.கருணாநிதி பிறந்தநாளை, உதவி செய்ய உகந்த நாளாக மாற்ற வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
மு.கருணாநிதி பிறந்தநாள் விழா
கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வு.மான வி.செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வரலாற்று சாதனைகள் பல படைத்து, சுயமரியாதை கொள்கையை இறுதிமூச்சு வரை பின்பற்றிய, மக்களின் நலனில் அக்கறை கொண்ட மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் டாக்டர் மு.கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உதவி செய்த உகந்த நாளாக‘ தி.மு.க. தொண்டர்கள் மாற்றிக்காட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மரியாதை செய்ய வேண்டும்
எனவே கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நகர, ஒன்றிய பேரூர், வார்டு பகுதிகளில் கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், கழகத்தினர் சமூக இடைவெளியை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடத்தி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும்.
கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சியை, மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு செயலாளர்கள், கழக சார்பு அணியினர் சிறப்பாக நடத்தி, அதன் தகவலுடன் புகைப்படங்களை மாவட்ட கழக அலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story