பெரம்பலூர், ஜெயங்கொண்டத்தில் மின்வாரிய அதிகாரிகள்- ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர், ஜெயங்கொண்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அதிகாரிகள்- ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர், ஜெயங்கொண்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அதிகாரிகள்- ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பெரம்பலூர் கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை தாங்கினார். மின்சார சட்ட திருத்த மசோதா 2020-ஐ மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மாநில மின்வாரிங்களை பிரிக்கக்கூடாது. மாநில அரசின் உரிமைகளை பறிக்க கூடாது.
ஆர்ப்பாட்டம்
பொதுத்துறையான மின்சாரத்துறையை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. விவசாயம், குடிசை, நெசவு போன்ற தொழில்களுக்கு சமூக அக்கறையுடன் செயல்படுத்தி வரும் மாநில அரசின் மானிய திட்டங்களை மத்திய அரசு முடக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்கங்களின் மின்வாரிய அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் மின்வாரிய அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து பணிபுரிந்தனர்.
ஜெயங்கொண்டத்தில்...
இதேபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கம், சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பொறியாளர் பிரிவு அரியலூர் மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன், சங்க உறுப்பினர் ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், ஐக்கிய சங்க செயற்குழு உறுப்பினர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story