திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
திருவாரூர்,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி மணலி பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் சென்னையில் மார்க்கெட்டிங் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்கள் முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய கொரடாச்சேரி விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த 58 வயது பெண் ஒருவர், சென்னையில் இருந்து பிரசவத்திற்காக திருவாரூர் வாழவாய்க்கால் பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்த 32 வயது பெண் ஒருவர், சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து திருவாரூர் அருகே அம்மையப்பன் உறவினர் வீட்டிற்கு வந்த 25 வயது வாலிபர் ஆகிய 3 பேருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் 4 பேரும்் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 50 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 36 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 14 பேர் மட்டுமே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story