வாய்மேடு பகுதியில் 200 குடும்பங்களுக்கு நிவாரண உதவி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
நாகை மாவட்டம் வாய்மேடு 3-வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வாய்மேடு,
நாகை மாவட்டம் வாய்மேடு 3-வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா 10 கிலா அரிசி, காய்கறி தொகுப்பு, மளிகை பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய தொகுப்புகளை வீடு, வீடாக சென்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.
இதில் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story