ஸ்ரீபெரும்புதூரில் மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
ஸ்ரீபெரும்புதூரில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கம்பியில் மோதியது.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கச்சி பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 24). இவர் பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், தான் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை பதிவு செய்தார். பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லிக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.
ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையம் அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு வேகமாக சென்றது. மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கம்பியில் மோதியது. இதில் ராஜசேகரன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் ராஜசேகரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story