தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த தாய்-மகள் கைது


தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு   மண்எண்ணெய் கேனுடன் வந்த தாய்-மகள் கைது
x
தினத்தந்தி 3 Jun 2020 6:10 AM IST (Updated: 3 Jun 2020 6:10 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த தாய்-மகள் கைது செய்யப்பட்டனர்.

தேனி, 

தேனி அருகே உள்ள குன்னூர் கிழக்கு தெருவை சேர்ந்த மகாராஜா மனைவி நிர்மலாதேவி (வயது 31). இவர் தனது தாய் பன்னீர்செல்வியுடன் (67) தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், நிர்மலாதேவி கொண்டு வந்த பையை சோதனையிட்டனர். அப்போது அதற்குள் 5 லிட்டர் கேனில் மண்எண்ணெய் இருந்தது. விசாரணையில், இடப்பிரச்சினை தொடர்பாக தீர்வு கிடைக்காததால் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் அவர்கள் மண்எண்ணெய் கேனை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் தேனி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Next Story