தேனி அரசு சட்டக்கல்லூரிக்கு ரூ.89 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடக்கிறது
தேனி அரசு சட்டக்கல்லூரிக்கு ரூ.89 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடக்கிறது.
தேனி,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரிலும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியாலும் தேனி மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கல்லூரி வகுப்புகள் தற்போது உப்பார்பட்டி விலக்கில் உள்ள ஒரு தனியார் பள்ளி கட்டிடத்தில் நடந்து வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு தப்புக்குண்டு சாலையோரம் இடம் தேர்வு செய்யப்பட்டது.
புதிய சட்டக்கல்லூரி கட்டிடம், மாணவ-மாணவிகள் தங்கும் விடுதி ஆகியவை கட்டுவதற்கு அரசு ரூ.89 கோடியே 1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தம் 8 பிரிவுகளாக கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டிடங்கள் மொத்தம் 25 ஆயிரத்து 575 சதுர மீட்டர் பரப்பளவில் அமைய உள்ளது.
இன்று பூமி பூஜை
இந்த கட்டிட பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை வீரபாண்டி அருகே தப்புக்குண்டு சாலையில் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் நடக்கிறது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பூமி பூஜையை தொடங்கி வைக்கிறார். விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
Related Tags :
Next Story