திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு 1,390 தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைப்பு
திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு 1,390 தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி,
திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு 1,390 தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் குடும்பத்துடன் பிழைப்பிற்காக புலம் பெயர்ந்து வேறு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால், அவர்கள் வேலையின்றி வருவாய்க்கும் வழியின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
எனவே, அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்திட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து இதுவரை சுமார் 8 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலம்
இந்த நிலையில் நேற்று மேற்கு வங்காள மாநில தொழிலாளர்கள் 1,390 பேர் தஞ்சை மற்றும் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து 24 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் திருச்சி மாவட்டத்தில்-516 பேர், புதுக்கோட்டை மாவட்டத் தில்-121 பேர், தஞ்சாவூர் மாவட்டத்தில்-317 பேர், பெரம்பலூர் மாவட்டத்தில்-156 பேர், அரியலூர் மாவட்டத்தில் -80 பேர், நாகை மாவட்டத்தில்-96பேர், திருவாரூர் மாவட்டத்தில் -104 பேர் என 1,390 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக அவர்கள், அந்தந்த மாவட்டங்களில் இருந்து பஸ்களில் திருச்சி ஜங்ஷன் மற்றும் தஞ்சாவூர் ரெயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர். தஞ்சை ரெயில் நிலையத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் 517 பேர் ஏற்றப்பட்டனர். மதியம் 12 மணிக்கு புறப்பட்ட ரெயில், திருச்சி ஜங்ஷனுக்கு பிற்பகல் 1 மணிக்கு வந்தது. திருச்சியில் இருந்து திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் வசித்த 813 தொழிலாளர்கள் ஏற்றப்பட்டனர். தங்களது உடைமைகளுடன் ரெயில் நிலையத்திற்கு வந்த அவர்களை சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டனர். அவர்களுக்குரிய டிக்கெட் மற்றும் சாப்பாடு பார்சல், தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கப்பட்டன.
வழியனுப்பு
பின்னர் ரெயில் பெட்டிகளில் தொழிலாளர்கள் அமர வைக்கப்பட்டனர். அவர்களை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு மற்றும் திருச்சி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், தாசில்தார் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். சிறப்பு ரெயில் பிற்பகல் 2 மணிக்கு மேற்கு வங்காளம் நோக்கி புறப்பட்டு சென்றது. அங்கு நாளை (வியாழக்கிழமை) மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள நியூஜல்பாய்குரி ரெயில் நிலையத்தை அடைகிறது.
Related Tags :
Next Story