அரவக்குறிச்சியில் ஆதரவற்ற 2 பேரின் பாசப் போராட்டம்
அரவக்குறிச்சி-கரூர் ரோடு, நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.
அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சி-கரூர் ரோடு, நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. அப்போது நடக்க முடியாமல் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கால்களால் தவழ்ந்தபடி நடுரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த முதியவரை தூக்கி ரோட்டின் ஓரத்தில் கொண்டு சென்று விட்டனர். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிந்தது. அவருக்கு, ஒரு பெண் உணவு வழங்கினார்.
அதை அவர் சாப்பிட மறுத்து தண்ணீர் மட்டும் குடித்தார். அப்போது அந்த வழியாக ஆதரவற்ற மற்றொரு நபர் பாட்டுப்பாடிக்கொண்டே சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் முதியவர் சாப்பிட மறுத்த உணவை இவருக்கு கொடுத்தனர். உடனே, அந்த நபர் உணவை பெற்றுக் கொண்டு முதியவரின் அருகில் சென்று அய்யா, சாப்பிடுங்கள் என்று கூறினார். அதற்கு அந்த முதியவர், நீ சாப்பிட்டால்தான் நான் சாப்பிடுவேன் என்று மறுக்கவே அந்த நபர் முதியவருக்கு உணவை கையில் எடுத்து ஊட்டி விட்டார். பின்னர், தானும் அங்கு அமர்ந்து உணவு சாப்பிட்டார். ஆதரவற்ற இவர்களின் பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களின் கண்களை கலங்க செய்தது.
Related Tags :
Next Story