தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வீரபாண்டி,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் 6 மாத காலத்திற்கு வாடிக்கையாளர்களிடம் கடன் தொகையை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில் திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்கிய மைக்ரோ பைனான்ஸ் என்னும் நிதி நிறுவனம் தொடர்ந்து தவணைத்தொகை கேட்டு வற்புறுத்தி வருவதாகவும், தவணை செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தை சேர்ந்த 100-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் நேற்று முருகம்பாளையம் தனியார் நிறுவனம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story