புகார் மனு கொடுக்க வந்தவர்களிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்திய போலீஸ் சூப்பிரண்டு


புகார் மனு கொடுக்க வந்தவர்களிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்திய போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 3 Jun 2020 10:44 AM IST (Updated: 3 Jun 2020 10:44 AM IST)
t-max-icont-min-icon

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது 5-வது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடலூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் இதுவரை மாவட்ட காவல்துறை சார்பில் போலீசார் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுதவிர கொரோனா வைரஸ் குறித்து காவல்துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் அவர்களுடன் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் முடிவு செய்தார்.

அதன்படி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் தரைத்தளத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு, அங்கு புகார் கொடுக்க வரும் மக்கள் ஒவ்வொருவராக தங்களது குறைகளை காணொலி காட்சி மூலம் கூறினர். அதற்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், அனைத்து புகார் மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். நேற்று மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் காணொலி காட்சி மூலம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் புகார் தெரிவித்தனர். 

Next Story