போலீஸ் நிலையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. போலீஸ் நிலையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூரில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு தற்போது போலீஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் புகார் கொடுக்கவும், வழக்குகள் தொடர்பாகவும் வரத்தொடங்கி உள்ளனர். இதனால் போலீசார் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. போலீஸ் நிலையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்க முடிவு செய்தார்.
இதன்படி திருப்பூர் மாநகர போலீஸ் வடக்கு சரகத்திற்குட்பட்ட வடக்கு, வடக்கு அனைத்து மகளிர், அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் பாக்கெட் சோப்பு, ஹேண்ட் வாஷ், சானிடைசர் மற்றும் வாளிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. மாநகர போலீஸ் வடக்கு உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் முன்னிலையில் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களிடம் வழங்கினார். இதில் இன்ஸ்பெக்டர்கள் ராஜன், கணேசன், முருகையன், முனியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் விவேக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story