திருமணம் நடந்த தொழில் அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஈரோட்டில் திருமணம் நடந்த தொழில் அதிபர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு திண்டல் செங்கோடம்பள்ளம் சிவன்நகரை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 57). இவர் சொந்தமாக டேங்கர் லாரிகள் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வாசுதேவனின் மகளுக்கு கடந்த மாதம் 24-ந் தேதி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் நடந்தது.
இந்தநிலையில் வாசுதேவனின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டுக்கு அனைவரும் குடும்பத்துடன் சென்றுள்ளனர். அங்கு உறவினர்களுக்கு விருந்து உபசரிப்பு அளித்த பிறகு நேற்று முன்தினம் வாசுதேவன் மற்றும் குடும்பத்தினர் ஈரோட்டுக்கு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்றனர்.
வீட்டில் உள்ள பீரோக்கள் திறக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகையும், பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று கதவுகள், சுவர், பீரோ உள்ளிட்ட இடங்களில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், வாசுதேவனின் வீட்டை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீடு புகுந்து 9 பவுன் நகையும், ரூ.70 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே திருமணம் செய்து வைக்கப்பட்ட மணப்பெண்ணின் நகையும் சேர்த்து கொள்ளையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இதனால் மொத்தம் 75 பவுன் நகை கொள்ளைபோனதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கொள்ளை நடந்த வீட்டின் உரிமையாளர் முதலில் 9 பவுன் நகையும், ரூ.70 ஆயிரமும் திருட்டு போனதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். ஆனால் அவர் குடும்பத்துடன் கலந்து பேசியபிறகு மணமகளின் நகையும் வீட்டிலேயே வைக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் கூடுதலாக நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும் பின்னர் தெரிவித்தார். எனவே அவர் மீண்டும் திருத்தியமைக்கப்பட்ட புகார் கொடுத்தால், அதன்படி விசாரணை மேற்கொள்ளப்படும்”, என்றனர்.

Related Tags :
Next Story