முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்து செய்ய ரெயில் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்
கொரோனா ஊரடங்கின் போது அனைத்து பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ஈரோடு,
ரெயில்களில் பயணம் செய்வதற்காக முன்கூட்டியே முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.
அதன்படி முன்பதிவு டிக்கெட் ரத்து செய்து கட்டணம் வழங்க நேற்று முதல் கவுண்ட்டர்கள் இயங்கத்தொடங்கின. ஈரோடு ரெயில் நிலையத்தில் இதற்காக முன்பதிவு பிரிவில் தனி கவுண்ட்டர்கள் இயங்கின. ஏற்கனவே முன்பதிவு செய்து, ரெயில் ரத்து காரணமாக பயணம் செய்ய முடியாத பயணிகள் ஏராளமானவர்கள் வந்து தங்கள் விண்ணப்பங்களை வழங்கினார்கள்.
போதிய இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் முன்பதிவு பிரிவில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. டிக்கெட் ரத்து செய்பவர்கள் அதில் உட்கார்ந்து தங்கள் முறை வரும்போது எழுந்து சென்று டிக்கெட்டை சமர்ப்பித்து உரிய தொகையை திரும்ப பெற்றனர்.
கடந்த 22-ந் தேதிக்கு பின்னர் ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு செய்யப்பட்ட தொகை திரும்ப வழங்கப்படும். ரெயில் பயண தேதியில் இருந்து 180 நாட்கள் வரை டிக்கெட்டை ரத்து செய்து முன்பதிவு தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் யாரும் அவசரப்பட்டு நெருக்கியடித்துக்கொண்டு வரவேண்டியது இல்லை என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story