செந்துறை, தா.பழூரில் தி.மு.க. நிர்வாகிகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம், செந்துறை காலனி தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பாக 100-க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் திரண்டனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை காலனி தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பாக 100-க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் திரண்டனர். கையில் பதாகைகள் உடன் திரண்ட அவர்கள் பட்டியல் இன மக்களை தொடர்ந்து இழிவாக பேசிவரும் தி.மு.க. நிர்வாகி ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். தொடர்ந்து பட்டியல் இன மக்களை இழிவாக பேசி வரும் தி.மு.க. நிர்வாகிகளை கண்டிக்காமல் மவுனம் காத்து வரும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினையும் கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து செந்துறை ஒன்றியம் முழுவதும் பட்டியல் இன மக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டம், தா.பழூர்-காரைக்குறிச்சி சாலையில் 100-க்கும் அதிகமான பட்டியல் இன மக்கள் திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தா.பழூர் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story