முள்ளுக்குறிச்சியில் 600 பேருக்கு நிவாரணம் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார்
செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை- எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை- எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு 600 பேருக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட் களை வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், சந்திரகாசன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுதா சுரேஷ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story