தென்திருப்பேரையில் கொரோனா பாதிப்பு: சுகாதார பணிகளை கலெக்டர் ஆய்வு
தென்திருப்பேரையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
தென்திருப்பேரை,
தென்திருப்பேரை மாவடிபண்ணையில் கொரோனா தொற்றால் 25 பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியை கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறி வித்து தனிமைப்படுத்தி உள்ளனர். அங்கு சுகாதார துறையினர் தினமும் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். மேலும் அங்கு வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில், தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென்திருப்பேரை மாவடிபண்ணையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரையிலும் 12 ஆயிரத்து 35 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 277 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரசால் பாதிக் கப்பட்ட 120 பேர் தூத்துக்குடி, நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மராட்டியம், குஜராத், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 177 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிறவர்களைக் கண்காணிக்கும் வகையில், மாவட்ட எல்லைகளில் 15 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 3, 4 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. இதில் தென்திருப்பேரை மாவடிபண்ணையில் நடந்த துக்க வீட்டுக்கு, சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவி உள்ளது.
இதேபோன்று காயல்பட்டினத்தைச் சேர்ந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிளம்பர் ஒருவர், பல்வேறு வீடுகளில் வேலைக்கு சென்றதின் மூலம் 9 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று எங்கிருந்து பரவியது என்பதை கண்டறிந்து, மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இதனால் சமூக பரவலாக மாறவில்லை. இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Related Tags :
Next Story